கடவுள் கூறிய வழியில் நம் வாழ்வை அர்பணிப்பது தான் உண்மையான ஆனந்தம்.
வியாழன், 7 ஜூன், 2012
செவ்வாய், 27 மார்ச், 2012
அறிந்துகொள்வோம், ஹதீஸ்களின் வரலாறு...
இதுவரையில் முஹம்மது நபி கூறியதாக நம்மை ஏமாற்றிய சதி கும்பலின் சூழ்ச்சியை அறிந்துகொள்வோம்
புதன், 7 செப்டம்பர், 2011
அர்பணித்தல் மதம் (இஸ்லாம்)
மிக்க அருளாளர், மிக்க கருணையாளருமாகிய
கடவுள்-ன் பெயரால்,
[3:19] கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் "அர்பணித்தல்" ஆகும்...
[3:85] எவர் ஒருவர் அர்பணித்தல் அல்லாததை தனது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அது அவரிடமிருந்து ஏற்று கொள்ளப்படமாட்டாது, இன்னும் மறுவுலகில் அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார்.
இஸ்லாத்தின் முதல் தூண் (அர்பணித்தல்):
"லா இலாஹா இல்லல்லாஹ்"(கடவுளைத்தவிர கடவுள் இல்லை)
வசனம் 3:18 (அர்பணித்தல்) இஸ்லாத்தின் முதல் தூணை எடுத்துரைக்கின்றது. “அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கடவுள் சாட்சியம் அளிக்கின்றார், அவ்வாறே வானவர்களும், அறிவைப் பெற்றிருப்போரும் செய்கின்றனர்.”
மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தூணானது சிதைக்கப்பட்டுவிட்டது. கோடிக் கணக்கான முஸ்லிம்கள், சாத்தானுடைய பலதெய்வக் கொள்கையின் வடிவத்தை சுவீகரித்துக் கொண்டு, கடவுளின் பெயருடன் முஹம்மதின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். ஆயினும், 39:45 ல் கூறப்பட்டுள்ள குர்ஆனின் மாபெரும் அடிப்படை அளவுகோல், இத்தகைய முஸ்லிம்களை நம்ப மறுப்பவர்கள் என்று முத்திரையிடுகின்றது: “கடவுள் மட்டும் தனித்துக் குறிப்பிடப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கிவிடுகின்றன, ஆனால் அவருடன் மற்றவர்கள் குறிப்பிடப்பட்டால், அவர்கள் திருப்தி அடைந்தவர்களாக ஆகின்றனர்”.
இந்த அடிப்படை அளவுகோலின் மீது நான் விரிவான ஆய்வு நடத்தி, ஒரு திடுக்கிடும் தீர்மானத்தை எட்டி உள்ளேன்; 3:18ல் எடுத்துக் கூறப்பட்டுள்ள, இஸ்லாத்தின் முதல் தூணை ஆதரிக்காத இணைவைப்பாளர்கள், சரியான ஷஹாதத்தை உச்சரிப்பதை விட்டும் கடவுளால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களால் முஹம்மதுடைய பெயரைக் குறிப்பிடாமல் தனியாக
“அஷ்-ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹ்” என்று மட்டும் கூறவே முடியாது. தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொள்ளும் எந்த ஒரு இணைவைப்பாளரிடமும் இதனை முயன்று பாருங்கள், அவர்களிடம்: “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறும்படி அறைகூவல் விடுங்கள், அவர்களால் ஒருபோதும் இதனை கூறவே இயலாது. இது ஆப்ரஹாமின் மார்க்கமாக இருப்பதால் (2:130, 135; 3:95; 4:125; 6:161, 12:37 - 38; 16:123; 22:78; பின்இணைப்பு 9), “லா இலாஹ இல்லல்லாஹ் (ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை) ” என்பது மட்டுமே ஒரே மார்க்க நம்பிக்கையாக இருக்க வேண்டும். பூமியில் ஆப்ரஹாமிற்கு முன்னால் முஹம்மது உயிர் வாழ்ந்திருக்கவில்லை.
“அஷ்-ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹ்” என்று மட்டும் கூறவே முடியாது. தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொள்ளும் எந்த ஒரு இணைவைப்பாளரிடமும் இதனை முயன்று பாருங்கள், அவர்களிடம்: “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறும்படி அறைகூவல் விடுங்கள், அவர்களால் ஒருபோதும் இதனை கூறவே இயலாது. இது ஆப்ரஹாமின் மார்க்கமாக இருப்பதால் (2:130, 135; 3:95; 4:125; 6:161, 12:37 - 38; 16:123; 22:78; பின்இணைப்பு 9), “லா இலாஹ இல்லல்லாஹ் (ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை) ” என்பது மட்டுமே ஒரே மார்க்க நம்பிக்கையாக இருக்க வேண்டும். பூமியில் ஆப்ரஹாமிற்கு முன்னால் முஹம்மது உயிர் வாழ்ந்திருக்கவில்லை.
ஒரு மாபெரும் இறை நிந்தனை
முஹம்மது நபியின் விருப்பத்திற்கு எதிராக, அவரை, இணைவைத்து வழிபடுவதற்காகக் குர்ஆனைச்
சிதைத்துத் திரித்துக் கூறுவதை விட மாபெரும் இறைநிந்தனை எதுவுமில்லை. அத்தியாயம் “முஹம்மத்”
வசனம் 19 (47:19) “ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”
என்று கூறுகின்றது. கீழே காட்டப்பட்டிருப்பது, த ரிவியூ ஆஃப் ரிலிஜன்ஸ் (சமயங்கள் குறித்த ஒரு திறனாய்வு)
என்ற முஸ்லிம் பிரசுரத்தின், வழமையான அடையாளச் சொல் முத்திரையின் புகைப்பட நகல் ஆகும்.
(லண்டன் மசூதி, 16, க்ரெஸ்ஸன்ஹால் சாலை, லண்டன் ளுறு185ணுடு,இங்கிலாந்து) த ரிவியூ ஆஃப் ரிலிஜன்ஸ் ன்
வெளியீட்டாளர்கள், குர்ஆனின் அழகிய எழுத்து முறையைப் பயன்படுத்தி, “முஹம்மது ரசூலுல்லாஹ்”, என்ற வாசகத்தைச் சேர்த்து 47:19ல் கூறப்பட்டுள்ள குர்ஆன் வாசகம் அதுதான் என்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். எத்தகையதொரு இறைநிந்தனை!
அல்லாஹ் என்ற அந்த ஒரு கடவுளைத் தவிர வேறு கடவுள் எதுவுமில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; முஹம்மது கடவுளின் ஒரு தூதர் ஆவார்.
(அந்த இறைநிந்தனை)
சிதைக்கப்பட்ட இஸ்லாத்தை எடுத்துக்காட்டும் ஓர் உதாரணம்
அடிப்பணிந்தோர் அனைவரின் ஒற்றுமை
[2:62] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும், யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும், மேலும் மாறியவர்களும், எவர் ஒருவர்(1) கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[16:51] கடவுள்:“இரண்டு தெய்வங்களை வழிபடா தீர்கள்; இருப்பது ஒரே ஒரு தெய்வம் மட்டுமே. நீங்கள் என்னிடம் மட்டுமே பயபக்தியோடு இருக்க வேண்டும்” என்று பிரகடனம் செய்துள்ளார்.
[16:52] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது, ஆகையால் மார்க்கம் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். கடவுள்-ஐத் தவிர மற்றொன்றை வழிபடுவீர்களா?
[3:102] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் -க்கு எவ்வாறு அஞ்சவேண்டுமோ, அவ்வாறு அஞ்ச வேண்டும். மேலும் அடிபணிந்தவர் களாகவே அன்றி மரணிக்காதீர்கள்.
நம்பிக்கையாளர்கள் ஒற்றுமையாகஇருப்பார்கள்
நீங்கள் கடவுள்-ன் கயிற்றை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும், நீங்கள் அனை வருமாக, மேலும் நீங்கள் பிளவுபட்டிருக் காதீர்கள். உங்கள் மீது கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள் - நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள் மேலும் அவர் உங்கள் இதயங்களை ஒன்று சேர்த்தார். அவரது அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள், மேலும் அங்கிருந்து உங்களை அவர் காப்பாற்றினார். இவ்விதமாக தன் வெளிப்பாடுகளை, நீங்கள் வழி நடத்தப்படும் பொருட்டு கடவுள் உங்களுக்கு விளக்குகின்றார்.
[39:2-3] சத்தியத்துடன், இந்த வேதத்தை உமக்கு நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்; கடவுள்-க்கு மட்டுமே உங்கள் மார்க்கத்தை அர்ப்பணித்துக் கொண்டவர் களாக, நீங்கள் அவரை வழிபட வேண்டும். நிச்சயமாக, மார்க்கம் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படவேண்டும். அவருடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள், “கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைவழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின் றார்கள்!” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்ப மறுப்பபவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
மார்க்கம் சம்பந்தமாக பிரிவுகள் கண்டனம்செய்யப்படுகின்றது
[6:159] எவர்கள் தங்களையே பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கின்றனரோ அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது, பின்னர் அவர் கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார். 160. எவரேனும் நன்னெறியானதொரு காரியம் செய்தால் பத்திற்கான வெகுமதியை பெறுகின்றார், மேலும் ஒருவர் ஒரு பாவம் செய்தால் அந்த பாவத்திற்குரிய கூலி மட்டுமே கொடுக்கப் படுகின்றார். ஒருவரும் சிறிதளவும் அநீதியை அனுபவிக்க மாட்டார்கள்.
மார்க்கம் ஒன்றே ஒன்று தான்
[42:13]நுஹிற்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், மேலும் இப்ராஹிம், மூஸா,மற்றும் ஈஸாவிற்கும் விதித்ததுமாவது: “இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்” என்பதே.
ஏகத்துவவாதிகளும் இணைவழிபாடு செய்பவர்களும் எதிரி நிலையில்
அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் இணைவழிபாடு செய்பவர்கள் பெரும் கோபம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார்; முற்றிலும் அடிபணிந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.
கடவுள்
மிக்க அருளாளரும், மிக்க கருணையாளருமாகிய கடவுள் பெயரால்
[39:67] கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒரு போதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் இருக்கும். உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளது. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.
[2:255] கடவுள்: அவரைத் தவிர வேறெந்த தெய்வமும் இல்லை, அவர் என்றென்றும் ஜீவித்திருப்பவர், நிரந்தரமானவர். ஒரு நொடி கவனமின்மையோ, அல்லது சிறு தூக்கமோ அவரைப் பீடிக்காது. வானங்களில் உள்ள அனைத்தும் மேலும் பூமியில் உள்ள அனைத்தும் அவருக்கே உரியது. அவருடைய விருப்பத்திற்கு ஏற்பவே அல்லாமல் யார் அவரிடம் பரிந்துரை செய்ய முடியும்? அவர் களுடைய கடந்த காலத்தையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிவார். அவர் நாடியவாறே அல்லாமல் எவர் ஒருவரும் எந்த அறிவையும் பெறுவதில்லை. அவருடைய அரசாட்சி வானங்களையும், பூமியையும் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் அவற்றை ஆள்வது அவருக்கு ஒரு போதும் சுமையாக இருப்பதில்லை. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், மகத்தானவர்.
[24:35] கடவுள் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக உள்ளார். அவருடைய ஒளிக்கு உதாரணமாவது, ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கப் பட்டுள்ள, ஒரு விளக்கின் பின்னாலுள்ளதொரு குழிகண்ணாடியைப் போன்றதாகும். அக் கண்ணாடிக் குடுவை முத்தைப் போல் பிரகாசமானதொரு நட்சத்திரத்தைப் போன்று ள்ளது. அதற்குரிய எரிபொருள், கிழக்கத்தியது மல்லாத, அன்றி மேற்கத்தியதுமல்லாத, அருள் பாலிக்கப்பட்டதொரு எண்ணெய் தரும் மரத்திலிருந்து வழங்கப்படுகின்றது. அதன் எண்ணெய் ஏறத்தாழ சுயமாகவே ஒளிர்கின்றது; அதனை மூட்டுவதற்கு நெருப்பு எதுவும் தேவையில்லை. ஒளிக்கு மேல் ஒளி. கடவுள் (வழிநடத்தப்படவேண்டும் என) நாடுகின்ற எவரையும் தன் ஒளியின் பால் வழிநடத்துகின்றார். நீதிபோதனைகளை மனிதர்களுக்குக் கடவுள் இவ்விதமாக எடுத்துரைக்கின்றார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[17:110] “கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்தப் பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை” என்று கூறுவீராக...
[59:23] அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அரசர், மிகப் புனிதமானவர், அமைதியுடையவர், மிகுந்த நம்பிக்கைக் குரியவர், மேலான அதிகாரம் மிக்கவர், சர்வ வல்லமையுடையவர், மிகவும் சக்திநிறைந்தவர், மிகவும் கௌரவமானவர், கடவுள் துதிப்பிற் குரியவர்; பங்காளிகள் கொண்டிருப்பதை விடவும் மிக மேலானவர்.
[59:24] அவர்தான் ஒரே கடவுள். படைப்பாளர், ஆரம்ப கர்த்தா, வடிவமைப்பவர். மிகவும் அழகிய பெயர் கள் அவருக்கேயுரியது. வானங்கள் மற்றும் பூமி யில் உள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[41:37] இரவும், பகலும், மேலும் சூரியனும், சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவைகளாகும். சூரியன் முன்னிலையிலோ, அன்றிச் சந்திரனுக் கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் உண்மை யாகவே அவரை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்த கடவுள்-ன் முன்னிலையில் தான் நீங்கள் சிரம்பணிந்து விழவேண்டும்.
கணித அற்புதம்
Mathematical Miracle of the Quran
கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
மிக நிச்சயமாக, சந்திரனின் மீது (நான் ஆணை யிடுகின்றேன்). மேலும் இரவானது அது கடந்து செல்கின்ற போது. மேலும் காலையானது அது பிரகாசிக்கின்ற போது. இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்*. [74:32-35]
மனிதர்கள் எழுதிய எந்தவொரு புத்தகத்திலும்ஒருபோதும் காணமுடியாத தனித்துவமிக்ககுறிப்பிடத் தகுந்த விசயங்களால், குர்ஆனின் குணாதிசயம் விவரிக்கப்படுகின்றது. சூராக்கள்,வசனங்கள், வார்த்தைகள், குறிப்பிட்ட சில எழுத்துக்களின் எண்ணிக்கை, ஒரே மூலத்திலிருந்து வந்தவார்த்தைகளின் எண்ணிக்கை, தெய்வீகப் பெயர்களின் பல வகைகள் மற்றும் எண்ணிக்கை, குறிப்பிட்டசில வார்த்தைகளின் தனித்துவமிக்க எழுத்துகள், குறிப்பிட்ட சில வார்த்தைகளினுள் குறிப்பிட்ட சிலஎழுத்துகளின் இல்லாமை அல்லது வேண்டுமென்று செய்யப்பட்டிருக்கும் மாற்றம், மேலும் குர்ஆனின்மற்ற பல பொருட்களையும் அதன் பரிமாணத்தையும் சேர்த்து - குர்ஆனின் ஒவ்வொரு பொருளும்கணிதரீதியில் தொகுக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் கணிதக்கட்டமைப்பில் முக்கியமான இரண்டுபெரும்பக்கங்கள் உள்ளன: (1) கணித அடிப்படையிலான இலக்கியத் தொகுப்பு மற்றும் (2) சூராக்கள்மற்றும் வசனங்களின் எண்ணிக்கையில் சம்பந்தப்பட்டிருக்கும் கணித அமைப்பு. விரிவான இந்தக்கணிதக் குறியீடின் காரணமாக, குர்ஆனின் மூலத்திலோ அல்லது பௌதீக அமைப்பிலோ ஏற்படும்மிகச்சிறிய சிதைவும் உடனடியாக வெளிக்காட்டப்படுகின்றது.
அதன் மீது பத்தொன்பது உள்ளது*.
புரிந்துகொள்ள எளிதானது
போலியாகத்தயாரிக்க இயலாதது
சரித்திரத்திலேயே முதன்முறையாக தெய்வீக எழுத்தாளருடைய உள்கூடிய சான்றுடன் ஒரு வேதத்தைநாம் பெற்றிருக்கின்றோம் - மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு கணிதத்தொகுப்பு.
இந்தப் புத்தகத்தை படிப்பவர் எவரும் குர்ஆனின் கணித அற்புதத்தை எளிதாகப் பரிசோதித்திட முடியும்.“கடவுள்” (அல்லாஹ்) எனும் வார்த்தை இப்புத்தகம் முழுவதும் தடித்த பெரிய எழுத்துக்களில்எழுதப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப் பகுதியிலும் “கடவுள்” எனும் வார்த்தையின்அடுத்தடுத்த நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் கடைசிப் பக்கமான பக்கம் 372, “கடவுள்”எனும் வார்த்தையின் மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கை 2698 அல்லது 19 X 142 என்று காட்டுகின்றது.
இன்னும் கூடுதலாக, “கடவுள்” எனும் வார்த்தை காணப்படுகின்ற வசனங்கள் அனைத்தின் எண்களையும்நாம் கூட்டும்போது நாம் பெறுகின்ற கூட்டுத் தொகையானது 118123, இதுவும் ஒரு 19ன் பெருக்குத்தொகையே ஆகும் (118123 = 19 X 6217). பத்தொன்பது என்பது குர்ஆனுடைய கணித ரீதியிலானகட்டமைப்பு முழுவதற்குமான பொதுவான வகுக்கும் எண் ஆகும்.
இந்தக் குறிப்பிடத் தகுந்த விசயம் மட்டுமே குர்ஆன் இந்த உலகிற்கு கடவுளின் செய்தியாக உள்ளதுஎன்பதற்கு மறுக்க முடியாத சான்றாக இருப்பதற்கு போதுமானது. மனிதனால் அல்லது மனிதர்களால்“கடவுள்” எனும் வார்த்தையின் இடம் பெறுதலை 2698 எண்ணிக்கையிலும் மேலும் அவை இடம்பெறும்வசன எண்களின் எண்ணிக்கையையும் இவ்வாறு செய்திருக்க முடியாது. முக்கியமாக (1) அறியாமைக்காலம் எனக் கருதப்பட்ட அக்காலத்தில் குர்ஆன் அருளப்பட்டதையும், (2) சூராக்களும் வசனங்களும்அவை வெளியிடப்பட்ட காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருந்தன என்றஉண்மையையும் கருத்தில் கொண்டு காணும்போது இது ஒரு போதும் செய்திட முடியாத விசயம் ஆகும்.வெளிப்பாட்டின் இறங்குவரிசையானது இறுதி வடிவத்திலிருந்தும் மிகவும் மாறுபட்டிருந்தது (பின்இணைப்பு 23). இருந்த போதிலும், குர்ஆனின் கணிதக் கட்டமைப்பு “கடவுள்” எனும் வார்த்தையோடுநின்றுவிடுவதில்லை, அது மிகவும் பரந்தது, மிகவும் சிக்கலானது, மொத்தத்தில் விரிவானது.
எளிய உண்மைகள்
குர்ஆனைப் போலவே, குர்ஆனின் கணிதக் குறியீடும் மிகவும் எளிய நிலையிலிருந்து மிகவும் சிக்கலானநிலை வரையிலும் விரிந்திருக்கின்றது. எளிய உண்மைகள் என்பது எந்த சாதனங்களையும்பயன்படுத்தாமலே ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிகின்ற உண்மைகளாகும். சிக்கலான உண்மைகளைகண்டறிய ஒரு கணக்கிடும் கருவியின் அல்லது கணினியின் உதவி தேவைப்படுகின்றது. பின்வரும்உண்மைகள் எந்த சாதனங்களின் உதவியுமின்றி நிரூபிக்கக் கூடியவை :
1. பஸ்மலாஹ் என அறியப்பட்ட முதல் வசனம் (1:1) .......... 19 எழுத்துக்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.
2. குர்ஆன் 114 சூராக்களையுடையதாக அமைக்கப்பட்டிருக்கின்றது, அது .......... 19 X6.
3. குர்ஆனில் உள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை 6346, அல்லது .......... 19 X334
(6234 எண்ணிடப்பட்ட வசனங்கள் & 112 எண்ணிடப்படாத வசனங்கள் (பஸ்மலாஹ்கள்) 6234+112 = 6346)இதனைக் கவனியுங்கள் 6+3+4+6 = ..........19.
4. குறிப்பாக சூரா 9ல் பஸ்மலாஹ் இல்லாத நிலையிலும், அது 114 முறை காணப்படுகின்றது (சூரா27ல் அது இருமுறை காணப்படுகின்றது) & 114 = .......... 19 X6
5. சூரா 9ன் விட்டுப்போன பஸ்மலாஹ்விலிருந்து சூரா 27ன் அதிகப்படியான பஸ்மலாஹ்வரையிலும் மிகச் சரியாக........... 19 சூராக்கள்.
6. இதனைத் தொடர்ந்து, சூரா 9லிருந்து 27 வரையிலுமுள்ள சூரா எண்களின் மொத்தத்தொகை(9+10+11+12+...26+27) 342 அல்லது .......... 19 X18.
7. இந்த மொத்தத் தொகை (342), சூரா 27ன் இரண்டு பஸ்மலாஹ்களுக்கும் இடையிலுள்ளவார்த்தைகளின் எண்ணிக்கைக்குச் சமமாயுள்ளது, மேலும் 342 = ..........19 X18.
8. பிரபலமான முதல் வெளிப்பாடு (96:1-5)..........19வார்த்தைகள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.
9. இந்த 19 வார்த்தைகளைக் கொண்ட முதல் வெளிப்பாடு 76 எழுத்துக்களால்அமைக்கப்பட்டிருக்கின்றது .......... 19 X4.
10. இறக்கப்பட்ட வரிசையில் முதலாவதான, சூரா 96,..........19 வசனங்கள் உடையதாய்அமைக்கப்பட்டிருக்கின்றது.
11. இறக்கப்பட்ட வரிசையில் முதலாவதான இந்த சூரா, கடைசி சூராவிற்கு மேலாய் .......... 19வதுசூராவாக இடம் பெற்றிருக்கின்றது.
12. சூரா 96, 304 அரபி எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது, மேலும் 304 = ................. 19 X16
13. கடைசி வெளிப்பாடான (சூரா 110) ............... 19 வார்த்தைகள் உடையதாய்அமைக்கப்பட்டிருக்கின்றது.
14. கடைசி வெளிப்பாட்டின் முதல் வசனம் (110:1)............ 19 எழுத்துக்கள் உடையதாய்அமைக்கப்பட்டிருக்கின்றது.
15. 14 வெவ்வேறு அரபி எழுத்துக்கள், 14 வெவ்வேறு “குர்ஆனியத் தலைப்பெழுத்துகளின்”வரிசைகளை அமைக்கின்றன (2:1ல் உள்ள அ.ல.ம. போன்றவை), மேலும் 29 சூராக்களில் முற்சேர்க்கையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்களைக் கூட்டினால் 14+14+29 = 57 = .......... 19 X3.
16. குர்ஆனியத் தலைப்பெழுத்துகள் காணப்படும் 29 சூரா எண்களின் மொத்தத் தொகையானது2+3+7+.......+50+68 = 822, மேலும் 822+14 ( 14 தலைப்பெழுத்துகளின் வரிசைகள்) = 836 அல்லது .......... 19 X44
17. தலைப்பெழுத்துக்களுடைய முதல் சூராவிற்கும் (சூரா 2) தலைப்பெழுத்துக்களுடைய கடைசிசூராவிற்கும் (சூரா 68) இடையே 38 தலைப்பெழுத்துகள் இல்லாத சூராக்கள் உள்ளன ................ 19 X2
18. தலைப்பெழுத்துக்களுடைய முதல் மற்றும் கடைசி சூராக்களுக்கு இடையே மாறி மாறி வரும்தலைப்பெழுத்துக்களுடைய மற்றும் தலைப்பெழுத்துகள் இல்லாத சூராக்களின் குழுக்கள் .............19
19. குர்ஆன் 30 வெவ்வேறான எண்களைக் குறிப்பிடுகின்றது : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 19, 20, 30, 40, 50, 60, 70, 80, 99, 100, 200, 300, 1000, 2000, 3000, 5000, 50,000 & 100,000. இந்த எண்களின் கூட்டுத்தொகையானது162146, இது = .......... 19 X8534.
இது சுருக்கமாகத் திரட்டப்பட்ட எளிய உண்மைகளின் தொகுப்பு ஆகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)