மிக்க அருளாளரும், மிக்க கருணையாளருமாகிய கடவுள் பெயரால்
[39:67] கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒரு போதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் இருக்கும். உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளது. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.
[2:255] கடவுள்: அவரைத் தவிர வேறெந்த தெய்வமும் இல்லை, அவர் என்றென்றும் ஜீவித்திருப்பவர், நிரந்தரமானவர். ஒரு நொடி கவனமின்மையோ, அல்லது சிறு தூக்கமோ அவரைப் பீடிக்காது. வானங்களில் உள்ள அனைத்தும் மேலும் பூமியில் உள்ள அனைத்தும் அவருக்கே உரியது. அவருடைய விருப்பத்திற்கு ஏற்பவே அல்லாமல் யார் அவரிடம் பரிந்துரை செய்ய முடியும்? அவர் களுடைய கடந்த காலத்தையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிவார். அவர் நாடியவாறே அல்லாமல் எவர் ஒருவரும் எந்த அறிவையும் பெறுவதில்லை. அவருடைய அரசாட்சி வானங்களையும், பூமியையும் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் அவற்றை ஆள்வது அவருக்கு ஒரு போதும் சுமையாக இருப்பதில்லை. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், மகத்தானவர்.
[24:35] கடவுள் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக உள்ளார். அவருடைய ஒளிக்கு உதாரணமாவது, ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கப் பட்டுள்ள, ஒரு விளக்கின் பின்னாலுள்ளதொரு குழிகண்ணாடியைப் போன்றதாகும். அக் கண்ணாடிக் குடுவை முத்தைப் போல் பிரகாசமானதொரு நட்சத்திரத்தைப் போன்று ள்ளது. அதற்குரிய எரிபொருள், கிழக்கத்தியது மல்லாத, அன்றி மேற்கத்தியதுமல்லாத, அருள் பாலிக்கப்பட்டதொரு எண்ணெய் தரும் மரத்திலிருந்து வழங்கப்படுகின்றது. அதன் எண்ணெய் ஏறத்தாழ சுயமாகவே ஒளிர்கின்றது; அதனை மூட்டுவதற்கு நெருப்பு எதுவும் தேவையில்லை. ஒளிக்கு மேல் ஒளி. கடவுள் (வழிநடத்தப்படவேண்டும் என) நாடுகின்ற எவரையும் தன் ஒளியின் பால் வழிநடத்துகின்றார். நீதிபோதனைகளை மனிதர்களுக்குக் கடவுள் இவ்விதமாக எடுத்துரைக்கின்றார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[17:110] “கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்தப் பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை” என்று கூறுவீராக...
[59:23] அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அரசர், மிகப் புனிதமானவர், அமைதியுடையவர், மிகுந்த நம்பிக்கைக் குரியவர், மேலான அதிகாரம் மிக்கவர், சர்வ வல்லமையுடையவர், மிகவும் சக்திநிறைந்தவர், மிகவும் கௌரவமானவர், கடவுள் துதிப்பிற் குரியவர்; பங்காளிகள் கொண்டிருப்பதை விடவும் மிக மேலானவர்.
[59:24] அவர்தான் ஒரே கடவுள். படைப்பாளர், ஆரம்ப கர்த்தா, வடிவமைப்பவர். மிகவும் அழகிய பெயர் கள் அவருக்கேயுரியது. வானங்கள் மற்றும் பூமி யில் உள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[41:37] இரவும், பகலும், மேலும் சூரியனும், சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவைகளாகும். சூரியன் முன்னிலையிலோ, அன்றிச் சந்திரனுக் கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் உண்மை யாகவே அவரை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்த கடவுள்-ன் முன்னிலையில் தான் நீங்கள் சிரம்பணிந்து விழவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
விரைவில் தொடர்புகொள்வோம்...