அர்பணித்தல் என்னும் மார்க்கத்தில், நாம் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, கடவுளிடம் மட்டுமே எல்லாச் சக்திகளும் உள்ளன என்ற அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையை அடைகின்றோம்; மற்ற எந்த ஒன்றுக்கும் அவரைச் சார்ந்திராமல் எந்தச் சுயமான சக்தியும் இல்லை. இத்தகையதொரு தெளிவான புரிந்து கொள்ளுதலின் இயல்பான தீர்வு என்னவெனில், கடவுளுக்கு மட்டுமே நமது வாழ்வையும், நமது வழிபாட்டையும் அர்ப்பணிப்பது என்பதேயாகும்
கேளுங்கள் இஸ்ரவேலர்களே! இரட்சகரான நமது கடவுள் ஒரே கடவுள் ஆவார்!
ஆகையால் இரட்சகரான உங்களுடைய கடவுளை
உங்கள் முழு இதயத்துடனும்,
உங்கள் முழு ஆன்மாவுடனும்,
உங்கள் முழு மனத்துடனும்,
மேலும் உங்கள் முழு பலத்துடனும் நீங்கள் வழிபட வேண்டும்.
[உபாகமம் 6:4-5, லூக்கா, 12:29-30, குர்ஆன் 3:18]
நாம் கடவுளை, அவருடைய மகத்தான தன்மைகளைத் துதிப்போம்.
அவரே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும், படைப்பாளர் என்ற முறையில்
அவற்றின் அடிப்படை ஆனவர்;
அவரே எல்லா இடங்களிலும் இருப்பவராகவும் எல்லா வல்லமையும் உடையவராகவும்,
எல்லாவற்றையும் அறிந்தவராகவும் சுயமாக ஜீவித்திருப்பவராகவும்,
அனைத்தையும் அறிந்திருப்பவராகவும், வழிபடப்படுவதற்குத் தகுதியானவரும் ஆவார்.
அவரே எல்லா அறியாமைகளையும், நம் மனங்களில் உள்ள அழுக்குகளையும் நீக்கி
அதனைத் தூய்மைப் படுத்தி கூர்மைப் படுத்துபவர் ஆவார்.
[காயத்ரி மந்திரம், யஜுர் வேதம்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
விரைவில் தொடர்புகொள்வோம்...